சமீபகாலமாக திடீரென அதிகரித்துள்ள இளவயது மரணங்கள் மிரட்சியை ஏற்படுத்திவரும் நிலையில், ‘அதற்கு, கொரோனா தடுப்பூசியும் ஒரு காரணமாக இருக்கலாம்’ எனப் பரவும் தகவல்களால் அச்சத்தில் இருக்கின்றனர் பொதுமக்கள். அதேபோல, தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இரண்டே நாட்களில் 4 இளவயது மருத்துவர்கள் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் மருத்துத்துறையைக் கலங்கடித்து வருகிறது.
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த 24 வயது மருத்துவர் தனுஷ், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிவந்த 38 வயதான உதவிப் பேராசிரியர் டாக்டர் விஜய் சுரேஷ்கண்ணா, திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவக்கல்லூரியின் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணரான 46 வயது சதீஷ்குமார், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையின் இதய சிகிச்சை நிபுணரான 41 வயது கவுரவ் காந்தி ஆகியோர் கடந்த வாரம் தங்கள் பணியிடங் களியே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/medicine_8.jpg)
ஏற்கெனவே, இளவயது மரணங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், 48 மணி நேரத்திற்குள் இந்த நால்வரின் மரணத்திற்கு பணிச்சுமையும் ஒரு காரணம் எனத் துறைசார்ந்த பலரும் கூறினாலும், அவர்களில் ஒருவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், ‘மாரடைப்பால் அவர் மரணிக்கவில்லை’ என்ற தகவலும் வெளியாகவே அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது மருத்துவத்துறை.
இந்நிலையில், சமூக ஆர்வலரும் கல்பாக்கம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராளியுமான டாக்டர். வி.புகழேந்தி, ‘"கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தமிழகத்திலேயே அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில், கொரோனாவிற்கு பின்பும் உயிரிழப்புகள் அதிகரித் துள்ளது. அதற்கு கொரோனா தடுப்பூசியும் ஒரு காரணமா?’ என்பதை ஆய்வு செய்யவேண்டும் என, தமிழ்நாடு பொது சுகாதாரத்துறைக்கு மின்னஞ்சல் அனுப்பிய செய்தியும் வெளியாக, மருத்துவர் புகழேந்தியை தொடர்புகொண்டு பேசினோம்.
"தற்போது இறந்துள்ள அந்த மருத்துவர்கள் நான்கு பேருக்குமே புகை பிடிக்கும் பழக்கமோ, மது அருந்தும் பழக்கமோ கிடையாது. 41 வயதான கவுரவ் காந்தியின் பிரேதப் பரிசோதனை அறிக் கையோ, ‘மாரடைப்பால் அவர் மரணிக்கவில்லை’ என்று கூறுகிறது. மாரடைப்பு என்பது வேறு, இருதய அழற்சி என்பது வேறு. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இருதய அழற்சி ஏற்படுவது கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் அழற்சியைவிட 7 மடங்கு அதிகம் என்றாலும்கூட, கொரோனா தடுப்பூசியும் இளம் மருத்துவர்களின் இறப்பிற்கு காரணமாக இருக்கமுடியும் என்பதால் அதுகுறித்து பிரேதப் பரிசோதனைகளும், ஆய்வுகளும் செய்வது முக்கியமானது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/medicine1_3.jpg)
பொதுவாக, எந்தவொரு தடுப்பூசியாக இருந்தாலும் அதனால் உடலில் ஏதாவது அலர்ஜியோ அல்லது மாறுதலோ ஏற்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள ஊசி போட்ட பிறகு சுமார் அரைமணி நேரம் அவர்கள் மருத்துவமனை யிலேயே கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்பது விதி. ஆனால், அவசர அவசரமாக கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு பொது மக்கள் அனைவரையும் கட்டாயப்படுத்திய ஒன்றிய அரசு, அவர்கள் அனைவரையும் அரை மணி நேரம் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்திருக்கவேண்டும் என்பதை எந்த இடத்திலும் அறிவுறுத்தியதாக தகவலே இல்லை.
இங்கிலாந்தில் கொரோனாவிற்குப் பின் இறப்பு விகிதம் பலமடங்கு அதிகமாகியுள்ளதால் கொரோனா தடுப்பூசியின் பங்கு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவ தாக தகவல்கள் தெரிவிக்கும் சூழலில், தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசியின் பங்கு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனாவிற்குப் பின் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளதற்கு கொரோனா தடுப்பூசியும் காரணமாக இருக்கமுடியும் என்பதை நான் தமிழக பொது சுகாதாரத் துறைக்கு மின்னஞ்சல் அனுப்பியபோது, அதை கணக்கில்கொண்டு மேற்படி ஆய்வுகளை நடத்தப்போவதாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஒருவரே எனக்கு பதிலளித்துள்ளது சற்று நம்பிக்கையை ஏற்படுத்துகிறது'' என்றார் டாக்டர் புகழேந்தி.
அதே நேரத்தில், ‘முழுமையான ஆய்வுகளை முடிக்கும் முன்பே சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை, அவர்களின் உடல்திறன் குறித்து எந்த பரிசோதனையும் மேற்கொள்ளாமலேயே அவசர கதியில் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தியதே ஒவ்வாமையால் ஏற்படும் இதுபோன்ற இள வயது மரணங்களுக்கு முக்கிய காரணம் என்கின்றனர் சில மருத்துவ வல்லுனர்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்கள், "கொரோனா துவங்கிய 2020, அதற்கு பிறகு மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் இந்தியா முழுக்கவே 54% அதிகரித்துள்ளதாக தேசிய ஆவ ணக் காப்பகத்தின் அறிக்கையே கூறுகிறது. அதுவும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் திடீர் திடீரென மரணிப்பதை பல இடங்களிலும் பார்க்கும்போது, கொரோனா தடுப்பூசி விசயத்தில் ஒன்றிய அரசு அவசரப்பட்டுவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒவ்வொருவரையும் மறுபரிசோதனைக்கு உட்படுத்தி இனி வரவிருக்கும் மரணங்களைத் தடுக்க ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்கின்றனர். ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-06/medicine-t.jpg)